ஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்தின் சம்மன் ஒரிஜினல் கிடைத்த பின்னர் விளக்கமளிக்கிறேன் என சிறை அதிகாரிகளிடம் சசிகலா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடந்து வருகிறது.
இதில் அடுத்தக்கட்டமாக சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு நீதிபதி சம்மன் அனுப்பி உள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறும், ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்மன் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் சம்மன் இ.மெயிலில் வந்திருப்பது பற்றி சசிகலாவிடம் தெரிவித்தனர்.
அதற்கு சசிகலா மெயிலில் தானே சம்மன் வந்துள்ளது. ஒரிஜினல் சம்மன் நேரில் வந்த பின்னர் விளக்கம் அளிக்கிறேன் என்று பதில் தெரிவித்தார்.அவரது பதிலை சிறை அதிகாரிகள் மெயில் மூலம் விசாரணை கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.