”இலங்கை பொலிஸ்” ஆகிறது இலங்கை பொலிஸ் திணைக்களம்

394 0

images (15)இலங்கை பொலிஸ் திணைக்களமானது ”இலங்கை பொலிஸ்” என இனிவரும் காலங்களில் அழைக்கப்படுவது தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவையின் இணைபேச்சாளர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொலிஸானது பல்வேறு யுகங்களிலும் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் பல்வேறுபட்ட பெயர்களை கொண்டு அழைக்கப்பட்டது.

1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டம் மற்றும் பொலிஸ் திணைக்கள கட்டளையின் கீழ் பொலிஸானது ”இலங்கை பொலிஸ் படையணி” என அழைக்கப்படுவதுடன், 1945 ஆண்டின் பின்னர் ”இலங்கை பொலிஸ் திணைக்களம்” என அழைக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டு முதல் பொலிஸ் திணைக்களமானது ”இலங்கை பொலிஸ் சேவை” என அழைக்கப்படுகின்றது.

நீண்ட வரலாற்றினைக்கொண்ட இலங்கை பொலிஸ் திணைக்களமானது தமது 150 ஆம் ஆண்ட நிறைவினை கொண்டாடுகின்ற நிலையில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தை அழைப்பதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயராக ”இலங்கை பொலிஸ்” என இனிவரும் காலங்களில் அழைப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.