வடக்கு முதலமைச்சர் இன்று அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கதிரைக்குரிய மாகாண சபையை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தோம். தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன் என்பதனை சம்பந்தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத் தில் அரசாங்கத்தில் இருந்துகொண்டு நான் யுத்த விரோத போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் அவ்வாறான போராட்டங்களில் நான் விக்கினேஸ்வரனை காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தரவுகள் இல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தன்னை விமர்சிப்பதாக வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
வடக்கு மாகாண சபையின் செலவு விபரங்களை வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எனக்கு அனுப்பியதாக கூறியிருக்கின்றார். ஆனால் அவ்வாறு எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவர் அனுப்பியிருக்க மாட்டார் என்று கருதுகின்றேன். காரணம் அவ்வாறு அனுப்பினால் நான் கூறியது உண்மையாகிவிடும் என்று அவருக்கு தெரியும்.
இதேவேளை மத்திய அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நிதியை வடக்கு மாகாணசபை உரிய முறையில் செலவளிக்கவி
ல்லை என்று இப்போதும் நான் கூறுகின்றேன். மேலும் நான் தமிழ் மக்களுக்காக எவ்வாறு குரல் கொடுக்கின்றேன் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். குறிப் பாக நான் உலக நாடுகள் மத்தியில் இலங்கை தமிழ் மக்களுக்காக எவ்வாறு குரல் கொடுத்தேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு நன்றாகவே தெரியும்.
தமிழ் மக்களுக்காக அதிகளவில் குரல் கொடுப்பது விக்கினேஸ்வரனா அல்லது டிலான் பெரேராவா என்று கேட்டால் டிலான் பெரேரா என்றுதான் தமிழ் மக்கள் கூறுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் அதனை கூறுவார்.
வடக்கு முதலமைச்சர் இன்று அமர்ந்திருக்கும் முதலமைச்சர் கதிரைக்குரிய மாகாண சபையை பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர்கள். தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தில் இருந்து கொண்டு நான் யுத்த விரோத போராட்டத் தில் கலந்துகொண்டேன். ஆனால் அவ்வாறான போராட்டங்களில் நான் விக்கி னேஸ்வரனை காணவில்லை என்றார்.