வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 2,53,483 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.