போக்குவரத்து சட்ட மீறல்களுக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறிவிடும் சட்டத் திருத்தம் சட்டவாக்கல் திணைக்கத்தில் முடங்கிக் கிடப்பதாக போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படப் போகிறது என்ற செய்தி பரவியவுடன் வாகன விபத்துக்கள் குறைந்து கொண்டு சென்றன. இந்த சட்டம் தாமதமாவது விபத்துக்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.