உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

288 0

க.பொ.த. உயர்தரப் பரீடசையின் இன்று அதிகாலை வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான  பெறுபேறுகளின்படி சகல துறைகளிலும் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபுர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன்படி, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டிலினி சந்துனிக்கா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன் துவாரகன் என்பவர் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டுலானி ரசந்திக பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவேனாவைச் சேர்ந்த பத்பேரியே முதிந்தவங்க தேரர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

Leave a comment