டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்மோர் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் 50 கிலோ மரை இறைச்சியை வைத்திருந்த ஒருவரை இன்று காலை 11.30 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மரை இறைச்சியை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போபத்தலாவ – மெனிக்பாலம பகுதியிலிருந்து போட்மோர் பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு கொண்டும் செல்லும் போது குறித்த சந்தேக நபர் மரையிறைச்சியுடன் கைது செய்யப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கு பிரிதொருவர் மரை இறைச்சியினை வழங்கியதாக தெரிவித்துள்ளதுடன், அவரைக்கண்டால் இணங்காட்டுவதாகவும் விசாரணைகளின் போது சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.