ஸ்ரீ ல.சு.க.யின் ஓர் அங்கமாகவே மஹிந்த தலைமையிலான குழு களமிறங்குகிறது- சுசில்

277 0

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒர் அங்கமாகவே போட்டியிடுகின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (27) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அருதிப் பெரும்பான்மை எடுக்க முடியாமல் போன சபைகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது மஹிந்த குழுவுடனேயே கூட்டுச் சேரும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலர் மொட்டுச் சின்னத்தின் தேர்தல் மேடையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் யாராவது ஏறினால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தீர்க்கமாக பல இடங்களில் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment