தெற்காசியாவில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவு

289 0
தாய், சேய் மரண புள்ளி விபரங்களின் அடிப்படையில், 2016ம் ஆண்டில் 112 தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை குடும்ப சுகாதார அலுவலக பணிப்பாளர் வைத்தியர் பிரியானி சேனாதீர மற்றும் சமூக வைத்திய நிபுணர் கபில ஜெயரத்னவால் அண்மையில், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்படி, தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே குறைவான தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் நேரடியான தாய் மரணங்கள் இவ் வருடம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவற்றின் பிரதான காரணம் பிரசவத்தின் பின்னராக இரத்தப் போக்கு, இருதயக் கோளாறு போன்றனவே எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, 43 வீதமான தாய் மரணங்கள் சரியான நேரத்திற்கு மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளாமையால் ஏற்பட்டுள்ளதோடு, 20 மரணங்கள் குடும்பத்தினரின் உரிய பராமறிப்பு இல்லாமல் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சுகாதார பணியாளர்களின் தாமதங்கள் 44 தாய் மரணங்கள் ஏற்பட நேரடியான மற்றும் மறைமுக காரணங்களாக அமைந்துள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a comment