நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் கடந்த 20ம் திகதியே குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி திணைக்களத்தினால் வழங்கப்படுள்ளது.
எனினும் அந்த வவுச்சரைக் கொண்டு பாதணிகளை கொள்வனவு செய்ய இம் மாதம் 31ம் திகதியே இறுதி திகதி என வவுச்சரில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.
இது பாடசாலைகளுக்கான விடுமுறை காலம் என்பதால் மாணவர்களுக்கு இந்த வவுச்சர்களை வழங்குவதில் அதிபர்கள்/ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அதேநேரம் பாடசாலை எதிர்வரும் 2ம் திகதியே ஆரம்பிக்கின்ற நிலையில், தூர பிரதேசங்களில் இருக்கும் விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கு வழங்க கூடிய நிலையில் பாதணிகளும் இல்லை எனவும் தெரிகின்றது.
எனவே, இந்த நடைமுறை சிக்கல்களை தவிர்க்க 31/12/2017 என்ற இறுதி திகதியை நீடிக்க வேண்டும் என நுவரேலிய மாவட்ட இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் இந்திர செல்வன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.