சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின் கீழ் ஒரு தொகை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை

568 28

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு சமுர்த்தியின் ஊடாக பசுமை பூங்கா என்ற திட்டத்தின கீழ் ஒரு தொகை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வீ.வரதராஜன் தெரிவித்தார்.

சூழல் பாதுகாப்பு மற்றும் வனவளத்தை பாதுகாக்கும் நோக்குடன் இத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெட்டவெளியாக காணப்படும் இடங்களை மக்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் பசுமையான இடமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நேக்கமாகும்.

இதற்கமைய இனங்காணப்பட்ட பிரதேசங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கன்றுகள் நடுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனை பாராமரிப்பதற்குரிய பொறுப்புக்களை பொது அமைப்புக்களிடம் கையளிக்கவுள்ளதாக முகாமைத்துவ பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.

Leave a comment