உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்கள் தொடர்பாக இதுவரை 31 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.
பிரச்சார பதாதைகளை வாகனங்களில் ஒட்டிச்செல்லல், ஒலிபெருக்கிகளை இணைத்து வாகனங்களை கொண்டு செல்லல், தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்ளிட்ட செயல்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளுக்கு சேதம் விளைவித்தல், வீடுகளுக்கு கல் எரிந்து சேதம் விளைவித்தல், தாக்குதல் நடத்தி காயத்திற்கு உட்படுத்தல், கொலை அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட செயல்கள் தொடர்பில் 22 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அயகம, மினுவாங்கொடை, கண்டி, நவகமுவ ஆகிய பொலிஸ் நிலையங்களில் குறித்த முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.