வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் – யாழில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு

283 0

யாழ்ப்பாணத்தில் பரவும் ஒருவித காய்ச்சல் 8 வயது சிறுவன் ஒருவன் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுப்பிடி பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 23ம் திகதி மாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேரும் யாழில் 11 பேரும் உரிய முறையில் அடையாளம் காணப்படாத ஒருவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஆராய கொழும்பில் இருந்து விஷேட வைத்தியக் குழுவொன்று முல்லைத்தீவு நோக்கி சென்றுள்ளது. எனினும், இந்த காய்ச்சல் குறித்து இதுவரை உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு மக்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment