கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் 10 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து முல்லைதீவு நோக்கி குறித்த போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயற்சித்த வேளையில் நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படியினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினர் மூலம் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.