பொலிதீன் மற்றும் லன்ச் சீர் என்பவற்றுக்கு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையை அமுல்படுத்த இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அச்சங்கத்திடம் இத்தடை குறித்து வினவியபோதே இவ்வாறு கூறியுள்ளது.
அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய வகை பொலிதீன் பைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய நான்கு, ஐந்து மடங்கு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது. இந்த நிதிச் சுமையை சகல உற்பத்தியாளர்களுக்கும் சுமப்பதில் பிரச்சினைகள் உள்ளன.
இதனால், உற்பத்தி குறைந்து, கேள்வி அதிகரிக்கும் போது சந்தையில் இப்பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.