எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 66 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் ஜனவரி 9ம் திகதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஆர். சபேசன் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 3மாத காலப்பகுதியில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 144 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதில் குறிப்பிட்ட சில மீனவர்களின் வழக்குகள் வெவ்வேறு தினங்களில் ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி நேற்று 66 இந்திய மீனவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த மீனவர்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து உரிய அறிவுறுத்தல் வராத காரணத்தால் மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.