மனதில் மிக அதிகமான பொறுமை குடிகொண்டிருக்கும் குண்டு மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக உடல் எடையுடன் கூடிய குண்டு மனிதர்களின் வாழ்க்கை நிலை குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஜாயிஸ் மில்லர்ட் மற்றும் ஜார்ஜ் டேவி ஸ்மித் ஆகியோர் இங்கிலாந்தில் 50 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இத்தகைய ஆய்வை நடத்தினர்.
அதில் 37 முதல் 73 வயதினர் வரை ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது உயரம், உடல் எடை குறித்த ‘பி.எம்.ஐ.’ மற்றும் உடல்நலம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
அவர்களில் அளவுக்கு மீறிய உடல் எடையுடன் குண்டாக இருந்தவர்கள் அதிக ரத்த அழுத்தத்துடன் இருந்தனர். அதனால் அவர்கள் இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது.
அதே நேரத்தில் அவர்கள் மனதில் மிக அதிகமான பொறுமை குடிகொண்டிருக்கும். அதனால் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாக அதிசயத்தக்க தகவலை தெரிவித்தனர். இதன்மூலம் குண்டு மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.