மதுசூதனன் தோல்விக்கு ஜெயக்குமார்தான் காரணம்: புகழேந்தி

306 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு காரணமே அமைச்சர் ஜெயக்குமார்தான் என டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.

கோவையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை வழிநடத்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தகுதியானவர்கள் இல்லை. சசிகலா, அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் ஆகியோரால் மட்டுமே இந்த கட்சியை வழிநடத்த முடியும்.

தினகரன் மாயமான் அல்ல கவரிமான். ஆர்.கே.நகரில் தினகரன் தோற்று போயிருந்தால் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கும். மோடி, அமித்ஷா போன்றவர்களின் காலில் அவர் விழவில்லை. அ.தி.மு.க.வினர் அனைவரும் தினகரன் பின்னால் அணிவகுக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் வழக்குகளுக்கு ஜாமீன் கொடுக்க உதவிய என்னை துரோகிகள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் தினகரன் பின்னால் அணி திரள வேண்டும்.

ஜெயலலிதாவினால் சட்டசபை உறுப்பினர்கள் ஆக்கப்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு காரணமே அமைச்சர் ஜெயக்குமார்தான். தி.மு.க.வை எதிர்க்க தகுதியான நபர் தினகரன் மட்டுமே.

கர்நாடக மாநில செயலாளராக முறைப்படி ஜெயலலிதாவால் நான் தேர்வு செய்யப்பட்டவன். என்னை யாராலும் நீக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment