ஊடக தமிழில் சி.பா ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்து நடை பள்ளி பாடதிட்டத்தில் இடம் பெறும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவித்தபடி, அங்கு சி.பா ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்.
ஊடக தமிழில் சி.பா ஆதித்தனார் செய்த சீர்திருத்தம் பள்ளி பாடதிட்டத்தில் இடம்பெற உள்ளது. 11-ம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் அவருடைய வரலாறு சேர்க்கப்பட உள்ளது. கிராமத்தில் உள்ள எளிய மக்களும் புரியும் வண்ணம் அவர் தினத்தந்தியில் தமிழை கொண்டு வந்தது தொடர்பான விபரங்கள் அதில் இடம் பெற உள்ளது.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத்தரும் வகையில் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.