இலங்கையில் ஆண்டுதோறும் 80000 பேர் பாம்புக்கடிக்கு உள்ளாவதாகவும் இவர்களில் 400 பேர் மரணிப்பதாகவும் களனிப் பல்கலைக்கழக ஆய்வொன்று குறிப்பிடுகின்றது.
களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜானக டி சில்வா, சிரேஷ்ட பேராசிரியர் மருத்துவபீட டாக்டர் அனுராதானி, கஸ்தூரிரட்ண சிரேஷ்ட விரிவுரையாளர், தலைவர் பொது சுகாதாரத்துறையினர் ஆகியோரைக் கொண்ட குழு இவ்வாய்வை மேற்கொண்டு இத் தகவலை வெளியிட்டுள்ளது.
நாடு பூராகவும் உள்ள மருத்துவமனை அறிக்கைகள், பாம்புக்கடி பற்றிய தேசிய வீட்டு வசதி ஆய்வு ஆகியவற்றில் இருந்தே இவ்வாய்வாளர்கள் தகவல் திரட்டியுள்ளனர்.
இதுவரை பாம்புக்கடி பற்றிய ஆய்வு, அதன் முக்கியத்துவம் என்பன எடுத்துரைக்கப்படவில்லை.
பாம்புக்கடிக்கு உள்ளானவர்களின் சிகிச்சைக்காக இலங்கை அரசாங்கம் 1.5 பில்லியன் ரூபாவை ஆண்டுதோறும் செலவிடுகிறது. பாம்புக்கடி சிகிச்சைக்கென உள்ள மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 6 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.
மேலும் இவ்ஆய்வுக்குழுவில் பேராசிரியர் ராஜித விக்ரமசிங்க, பேராசிரியர் அனுலம் பத்மேஸ்வரன், பேராசிரியர் குணவர்தன மற்றும் டாக்டர் ஷாலுகா ஜெயமான்னே ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது