இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது வட மாகாண முதலமைச்சரைச் சந்திப்பதாக கூறப்பட்டிருக்க வில்லை. இருப்பினும், வடக்கு முதலமைச்சர் மலேசியப் பிரதமரைச் சந்திக்க அவகாசம் வழங்குமாறு கோரியிருந்துள்ளார்.
விக்னேஸ்வரன் வடக்கை தனியான ஒரு நாடாக கருத்தில் கொண்டு, அரச தலைவர்களை தனியாக சந்திக்க அனுமதி கோருவது சட்ட்விரோதமானது என அரசாங்க உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, மலேசியப் பிரதமர் தமது தூதுக் குழுவொன்றை வடக்குக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.