நீதிபதியைத் திட்டிய மூவர் கைது

287 0

நுவரெலிய, ஹட்டன் மஜிஸ்ட்ரேட் சரவணராஜாவைத் திட்டிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஜிஸ்ட்ரேட் சரவணராஜா ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 23 ஆம் திகதி இரவு அவரது வாகனத்தைத் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் வந்த மூவர் நீதிபதியையும், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் ஏசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற இனந்தெரியாத நபர்கள் நேற்று கெகிராவ பொலிஸாரினால் நேற்று (25) நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment