முரண்பட்டால் மஹிந்த ராஜபக்ஷ கட்சியிலிருந்து நீக்கப்படுவார் –அமரவீர

247 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பினை வழங்கினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்க வேண்டி ஏற்படும் என  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கைக்கு அமையவே அனைவரும் செயற்பட வேண்டும். அவ்வாறில்லாமல் செயற்பட்டால் ஒழுக்காற்று நட வடிக்கை எடுக்கவேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரும் சிரேஷ்ட உறுப்பினருமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணியின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமை பொறுப்பை ஏற்கப்போவதாக கூறப்படுவது தொடர்பில்  வினவியதற்கே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment