யோசித்தவின் பாட்டி மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோரிடம் விசாரணை

448 0

fcid1யோசித்த ராஜபக்ஷவின் பாட்டி இன்றையதினம் நிதி மோசடிகள் குறித்த விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.

தெஹிவலையில் உள்ள அவர் வீடு மற்றும் காணி தொடர்பான விசாரணைகளின் நிமித்தம், அவர் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அழைப்பை புறக்கணித்த நிலையில், கடந்த 26ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதன்போது அவரை இன்றையதினம் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர் றிசாட் பதியுதன் இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்புhன விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

கடந்த ஆட்சி காலத்தில் சதொச நிறுவனத்துக்கான அரிசி கொள்வனவில் இடம்பெற்று மோசடிதொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் கடந்த 26ஆம் திகதியும் அவர் இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.