பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிப்போம்- மஹிந்த தேசப்பிரிய

279 0

இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த பெண் பிரதிநிதிகள் தொகை குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையினை இதன் மூலம் மக்கள் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment