சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் (26) 13 வருடங்கள் நிறைவடைவதை குறிக்கும் நிகழ்ச்சிகள் பல இன்று காலை 9.00 மணிக்கு காலி, தெல்வத்த பரேலிய சுனாமி நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளன.
இந்த சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவு கூறும் முகமாக இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசாங்கம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேஷியாவின் சுமாத்ராவின் மேற்குப் பகுதியில் இடம்பெற்ற 9.3 ரிச்ட்டர் நிலநடுக்கம் கடலிலுள்ள நீரை தரைக்குத் தள்ளியது.
இதனால், இலங்கையில் 13 மாவட்டங்களிலுள்ள 57 பிரதேச செயலகங்கள் பாதிக்கப்பட்டன. சுமார் 10 லட்சம் பேர் இந்த அனர்த்தத்தை உணர்ந்தனர். இந்த அனர்த்தத்தினால் உயிர்ச் சேதங்கள் தவிர 3800 கோடி ரூபா பொருளாதார சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.