கொஸ்கொட சுஜீயை கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவித்தல்.!

257 0

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்பில் இலங்கை பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும்  தற்­போது டுபாயில் இருப்­ப­தாக நம்­பப்­படும், பிர­பல பாதாள உலக தலை­வர்­க­ளான கொஸ்­கொட சுஜீ மற்றும் மாகந்­துரே மதூஷ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சிவப்பு மற்றும் நீல அறி­வித்­தல்­களை சர்வ­தேச பொலிஸார் பிறப்­பித்­துள்­ளனர். மனிதப் படு­கொ­லைகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகிய திட்­ட­மிட்ட குற்றங்கள் தொடர்­பி­லேயே இந்த  சிவப்பு, நீல அறி­வித்­தல்கள் பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளன.

தெற்கின் பிர­பல பாதாள உலக தலை­வ­னாக கரு­தப்­படும் கொஸ்­கொட சுஜீ எனப்­படும் கஜ­முனி சுஜீவ டி சில்­வா­வுக்கு மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பிலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்­பிலும் சர்­வ­தேச பொலி­ஸாரால் சிவப்பு அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் மாகந்­துரே மதூஷ் எனப்­படும் சம­ர­சிங்க ஆரச்­சிகே மதூஷ் ல­க் ஷித்­த­வுக்கு எதி­ராக இலங்கை பொலி­ஸா­ரினால் சர்­வ­தேச பொலி­ஸா­ருக்கு சாட்­சிகள் தொடர்ந்தும் முன் வைக்­கப்­பட்டு வரும் நிலையில், சிவப்பு அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­படும் செயன்­முறை  பூர்த்­தி­ய­டையும் வரையில், அவ­ருக்கு எதி­ராக நீல அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் விசேட அதி­ரடிப்படையின் கட்­டளைத் தள­ப­தியும், திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ரு­மான   எம்.ஆர். லதீபின் கீழ் இயங்கும் பாதாள உல­கத்தை ஒழிக்கும் பிரி­வான திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் ஊடாக திரட்­டப்­பட்ட 25 பாதாள உலக குழுக்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­டை­யோரின் சாட்­சி­யங்கள் சர்­வ­தேச பொலி­ஸா­ருக்கு இந்த சிவப்பு அறி­வித்­தல்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் ஆவணப் பிரிவின் ஊடாக குற்றப் புல­னா­ய்வுப்பிரிவின் சர்­வ­தேச பொலிஸ் பிரி­வுக்கு அந்த தக­வல்கள் வழங்­கப்பட்டு, அவர்கள் ஊடாக அவை சர்­வ­தேச பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலை­யி­லேயே தற்­போது சிவப்பு மற்றும் நீல அறி­வித்­தல்கள் இவ்­விரு பாதாள உலக தலை­வர்­க­ளுக்கும் எதி­ராக பிறப்­பிக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் கொஸ்கொட சுஜீயையும், மாகந்துரே மதூஷையும் எப்படியேனும் கைதுசெய்ய திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு பல்முனை திட்டங்களை வகுத்துள்ள நிலையிலேயே இந் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a comment