நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைப்பு, 48 பேருக்கு எதிராக வழக்கு

249 0

நாத்தாண்டிய பிரதேசத்தில் பயன்பாட்டுக்கு உதவாத உணவுப் பொருட்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் 48 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுச் சுகாதார அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக முன்னெடுத்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்  செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புக்களின் போது நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள 278 வியாபார நிலையங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும், இதில் 100 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment