சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒரு வார காலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனை இன்று (25) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று சுகம் விசாரித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.யுடன் அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.