கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சென்றவர்கள் வீட்டில் பத்து பவுண் நகை கொள்ளை

279 0

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து பவுன் தங்க நகைகளை திருடிய இருவரை நேற்று (24) மாலை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வரோதய நகர், உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் பாலையூற்று பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் நத்தார் கொண்டாட்டத்திற்காக ஆடைகள் கொள்வனவிற்காக சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யன்னலினூடாக வீட்டுக்குள் புகுந்து பத்து பவுன் தங்க நகைகளை திருடியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்று (25) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment