பணம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

3992 599

வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ​(24) கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 61 போலி கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் 49 மற்றும் 83 வயதான கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றைய தினம்(24) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment