ஏ-380 எனும் பயணிகள் விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நியூஸிலாந்தின் ஒக்லன்ட் நகரில் இருந்து துபாய் நோக்கி சென்ற போது திடீரென ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் 30,000 லீற்றர் எரிபொருளை பெற்றுக் கொண்ட அந்த விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது.
இதேவேளை இந்த விமானத்தில் 400 பயணிகள் மற்றும் 30 ஊழியர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.