பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்றவர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்தவர்கள் மனோவோக் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக சிறிய பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 20 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம், மணிலா நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.