ஆவா குழுவை உருவாக்கியது புலிகளல்ல! – மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி

347 0

யாழ்ப்பாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் ஆவா குழுவுக்கும் புலிகளுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.டி.கே. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ‘ வடமாகாணத்தில் தற்போது விடுதலைப்புலிகள் இல்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் விடுதலைப்புலிகள் இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கம் மற்றும் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை என்பவற்றாலேயே ஆவா குழு உருவாகியுள்ளது. இவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் இல்லை என டி.டி.கே. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment