உலகிலேயே மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை

6819 25

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் சூழ்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 15X20 மைக்ரோ மீட்டர் என்ற அளவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை அதிக சக்தி வாய்ந்த மைக்ரோஸ் கோப் மூலமே பார்க்க முடியும். அப்போதுதான் அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படிக்க முடியும்.

இது பிளாட்டினத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீது சிலிகான் நைட்ரேட் முலாம் பூசப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மூலமே இதை பயன்படுத்த முடியும்.

உலகிலேயே மிகச்சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை என சாதனை படைத்துள்ள இதை இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் டேவிட்காஸ், கென்மிஸ்கார்ட் ஆகியோர் உருவாக்கினர்.

Leave a comment