இராணுவ கேர்ணலுக்கு விளக்கமறியல்

368 0

asd1மாலபே – இசுருபுர பிரதேசத்தில் தனது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன் கேர்ணலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி மாலபே பிரதேசத்தில் வைத்து இராணுவ கேர்ணலின் மனைவி மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருந்தது.

இதனையத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரது கணவரான, இராணுவ லெப்டினன் கேர்ணலை நேற்று கைது செய்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பத்தரமுல்ல தியவன்ன வாவியில் இருந்து மீட்கப்பட்டது.