திருகோணமலை – சோனகவாடி பகுதியில் 15 வயது சிறுவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அப் பகுதி பாடசாலையில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து பட்டமிட்டுக்கொண்டிருந்த போது, பட்டம் மரத்தில் சிக்கியதால், அதனை எடுக்கச் சென்ற போதே அவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச் சிறுவன், நேற்று (24) பிற்பகல் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலையில் இரத்த கசிவு ஏற்பட்டமையினாலேயே இம் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.