ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞர் உடல் கருகி மரணம்

310 0
யாழ். அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக் கிள் திடீரென தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (24) மாலை இடம்பெற்றுள்ளது.

இளைஞர் ஒருவர் மோட்டார் கைக்கிளிலில் சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் மற்றும் வைத்தியசாலையில் நின்றவர்கள் ஒன்றிணைந்து நெருப்பை அணைக்க முயற்சித்தபோதும் நெருப்பு தொடர்ச்சியாக எரிந்ததில் இளைஞர் உடல்கருகி உயிரிழந்துள்ளார்.

Leave a comment