பொது­ஜன பெரமுனவின் தலை­வ­ரா­கிறார் மஹிந்த

330 0

ஒன்­றி­ணைந்த பொது­ஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்­றுக் ­கொள்­ள­வுள்ளார்.

ஜன­வரி 2 ஆம் திகதி சுக­த­தாச அரங்கில்  20 கட்­சி­களை இணைத்த புதிய கட்­சி­யாக  ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக இணையும் மாநாட்டில் இதனை   தெரி­விக்­க­வுள்­ள­தாக பொது­ஜன முன்­னணி வட்­டா­ரங்­களின் மூல­மாக தெரிய வரு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆலோ­ச­க­ராக செயற்­பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் எந்­த­வொரு செயற்­பாட்­டிலும் அவர் பங்­கு­கொள்­ள­வில்லை.

அதேபோல் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சார்­பிலும் எந்­த­வொரு பொறுப்­பி­னையும் இது­வ­ரையில் அவர் பெற்­றி­ருக்­கவும் இல்லை. அவ்­வா­றான நிலையில் தற்­போது புதி­தாக 20 கட்­சி­களை இணைத்து ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக உரு­வாகும் பொது­ஜன முன்­ன­ணியின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பெற்­று­கொள்­ளப்­போ­வ­தாக தெரிய வரு­கின்­றது.

அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக மாற்றம் பெற­வுள்ள நிலையில் அன்­றைய தினம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தலைமை பொறுப்­பினை ஏற்­று­கொள்­ள­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலின் போது பொது­ஜன முன்­ன­ணிக்கு சக்­தி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் இந்த செயற்­பா­டுகள் மாபெரும் மாநா­டாக  2 ஆம் திகதி கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­களில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன் போதே இந்த அறி­விப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆகவே இது குறித்து தம்­முடன் இணைந்து செயற்­படும் சகல கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­வ­துடன் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் பொது­ஜன முன்­ன­ணியின் பிர­தான நபர்­க­ளுடன் விசேட சந்­திப்­பொன்றும் இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போதே இவ்­வா­றான முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­னணி நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் மிகப்­பெ­ரிய அளவில் மக்கள் சந்­திப்­புகள் மற்றும் கூட்­டங்­களை நடத்­த­வுள்­ள­துடன் அனைத்து கூட்­டங்­க­ளுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­தாங்­குவார் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அர­சாங்­கதின் அங்கம் வகிக்கும் முக்கிய நபர்கள் சிலருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் சிலரை பொதுஜன முன்னணியுடன் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுஜன முன்னணியின் மூலமாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Leave a comment