ரத்மலான விமானப்படை விமான நிலையத்தை விஸ்தரித்து சிவில் விமான போக்குவரத்தை விருத்தி செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்திலுள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பை சிவில் விமான சேவைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமின் ஒரு பகுதியை அந்த படைப் பிரிவின் இணக்கப்பாட்டுடன், விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.