தமிழரசுக்கட்சி ஊடகப்பேச்சாளர் எம்.சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்று அமைச்சு பதவியினை ஏற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி நாளிதழான டெயிலி மிரர் இலங்கைக்கான ஜெர்மனிய தூதர் சந்திப்பில் அமைச்சரான சுமந்திரன் பங்கெடுத்ததாக கடந்த 19 ஆம் திகதி நிழற்படமொன்றை பிரசுரித்து செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து கொழும்பு தொலைச்காட்சியான சக்தி தொலைக்காட்சி இதனை வெளிப்படுத்தி சுமந்திரனிற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
தமிழர் விடயங்களை விட ஆளும்தரப்பு விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும் நாமாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அண்மையில் வரவுசெலவுத்திட்ட விவாதம் ஒன்றின்போது அரசாங்க உறுப்பினர் ஒருவருக்காகு ஆதரவாக வாக்குவாத்தில் ஈடுபட்டபோது இவர் அமைச்சர் போல செயற்படுவதாக கூட்டு எதிரணியினர் கேலி செய்திருந்தனர்.
இதேவேளை சுமந்திரன் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய செய்திகளை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மறுத்துள்ளார்.
எனினும் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னராக ஏற்படுத்தப்படவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மூவர் அமைச்சுப்பதவிகளைப் பெறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.