யாழ் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

267 0

யாழ் ஊர்காவற்றுறை தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தம்பாட்டியில் அமைக்கப்பட்ட மீன் சந்தையில் கடற்றொழிலாளர்களிடம் புதிதாக அறவிடப்படும் வரியை நிறுத்துமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்களிடம் கொள்வனவு செய்யப்படும் கடல் உணவு வகைகள், உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும். அதன் பின்னர் வரும் மேலதிக கடல் உணவுகளே வெளியிடங்களுக்கு அனுப்பப்படும். ஊர்காவற்றுறை பிரதேச சபையால் தற்போது சந்தை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் பிரதேச சபையால் வரி அறவிடப்படுகிறது. அதனால் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடற்றொழிலாளர்களின் வாழ வாதாரத்தைக் கருத்தில் எடுத்து வரி அறிவிடுவதை பிரதேச சபை நிறுத்தவேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

Leave a comment