அரசஊழியர்வீட்டுத்திட்டத்தில் அரசஉத்தியோகத்தர்கள் வசிப்பதற்கான அடிப்படைதேவைகள் அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கினாலே பூர்த்திசெய்யப்படாமல்உள்ளதாக ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திச்சங்கத்தலைவர் க.பேர்ணாட் தெரிவித்துள்ளார்
ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்ட கிராமஅபிவிருத்திங்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் கலந்துரையாடல் ஒன்று 23.12.அன்று இடம்பெற்றது அதில் தலைமைதாங்கியுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
ஓமந்தை அரசஊழியர்வீட்டுத்திட்டபகுதியில் அரசஊழியர்களுக்கு 600 காணிகள் வழங்கப்பட்டு 6ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது எனினும் இங்கு 60 அரசஉத்தியோகத்தர் குடும்பங்களே வீடுகட்டிகுடியேறியுள்ளனர் குடியேறிய குடும்பங்களில் 40 குடும்பங்களே நிரந்தரமாக வசிக்கின்றனர் வசிக்கும் குடும்பங்களுக்கு போதிய வீதியமைப்பு வசதியை வவுனியா தெற்கு பிரதேசசபையினர் ஏற்படுத்திகொடுக்கவில்லை வீதிமின்விளக்குகளை வீதிகளுக்கு பொருத்துமாறு கோரி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகிறது இது வரை எந்தவொரு மின்விளக்கையும் அவர்கள் பொருத்தவில்லை
இரவுவேளைகளில் பற்றைக்காட்டுக்குள்ளால் பயணிக்கமுடியாது அரசஉத்தியோகத்தர்கள் அவதிப்படுகின்றனர். பிரதேசசபையினர் எதாவது சாட்டுபோக்கை சொல்வதையே வழமையாகக்கொண்டு செயற்படுகின்றனர்.வீடமைப்பு அதிகாரசபையினரிம் காணிஉறுதியை பெறுதல் தொடர்பாகசென்றால் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறார்கள் இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் சென்றால் இ;வ்வீட்டுத்திட்டத்திற்கான காணி அதிகாரம் வீடமைப்பு அதிகாரசபையிடம் தான் கையளித்து விட்டேன் எனக்கு இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் இது சம்பந்தமாக காணியாளருக்கு கடிதம் எழுதினால் பதில் கிடைப்பதில்லை எமது கிராமத்தின் பிரச்சினைகளை சொன்னால் தாம் இதற்கு பொறுப்பு இல்லை என்கிறார்கள் காணிகள் பலவற்றில் அரச உத்தியோகத்தர்கள் பலர் வீடுகட்டவில்லை எனவே அந்த காணிகளை வேறு பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வீடமைப்பு அதிகாரசபையினர் பின்னடிப்பதும் அதிகாரிகளின் படுமோசமான அசட்டையீனத்தை காட்டுகிறது அதிகாரிகள் சுயநலவாதிகளாக செயற்படுவதாக கவலை தெரிவித்தார்
இக்கூட்டத்தில் கிராமஅபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் சு.வரதகுமார் வவுனியா பிரதேசசெயலக கிராமஅபிவிருத்திஉத்தியோகத்தர் மற்றும் அரசஉத்தியோகத்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்