யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய 29 வயதுடைய இராணுவச் சிப்பாயொருவர் இன்று மரணமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் இவர் சுகவீனமுற்ற நிலையில் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று மரணமானார்.
மரணமானவர் யட்டியாந்தோட்ட பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மதுசங்க எனவும் அண்மையில் திருமணமான அவருக்கு 03 மாத வயதுடைய குழந்தையொன்று உள்ளதாகவும் தெரிய வருகின்றது.