கஞ்சா கலந்த 100 கிலோ கிராம் புகையிலையை தம்வசம் வைத்திருந்த 3 பேர் பருந்திதுறை கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாருத்திதுறை காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த போதைப்பொருளை கொண்டு வந்த படகும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பருத்திதுறை பிரதேசத்தை சேர்ந்த 40, 44 மற்றும் 45 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று பருத்திதுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்