தொல் பொருட்களை சேதப்படுத்தினால் 20 இலட்சம் வரை அபராதம் விதிக்க யோசனை

248 0
தொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

தற்போது, இந்தக் குற்றங்களுக்காக 50,000 ரூபா அபராதமே விதிக்கப்படுவதாக தொல்பொருள் மேலதிக பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பீ.பி.மண்டாவல சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், தொல் பொருட்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக 20 இலட்சம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க, தமது திணைக்களத்திற்கு அமைச்சர் யோசனை வழங்கியுள்ளதாக, மண்டாவல மேலும் கூறியுள்ளார்.

Leave a comment