ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஜெரூசல யோசனைக்கு எதிராக இலங்கை வாக்களித்தமையினால் 870 கோடி ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்தப் போவதாக டிரம்ப் ஐ.நா. கூட்டத்தில் வைத்தே எச்சரித்திருந்தார்.
இது தவிர அமெரிக்காவினால் இலங்கைக்கு வேறு வகையிலான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவிகளும் எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.