இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தடை தொடர்பில் கலந்துரையாட இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் இன்று காலை (24) ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளனர்.
ரஷ்யாவின் இந்தத் தடையினை நீக்குமாறு கோரி இலங்கை அதிகாரிகள் நாளைய தினம் (25) ரஷ்ய அரசின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் கலாநிதி கீர்த்தி மொஹட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் “கெரப்” எனப்படும் ஒரு வகை வண்டு இருந்ததையடுத்து 18ஆம் திகதி தொடக்கம் இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.