இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல், அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

391 0

DSC_0624மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால திட்டத்தின் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல் வழங்குவது தொடர்பான அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது .மனித நேய அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால வேலைதிட்டத்தின் கீழ் இயற்கை அனர்த்தங்களின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பான முன்னறிவித்தல் செயல்திட்டங்கள் தொடர்பான அதிகாரிகளுக்கிடையிலனா கலந்துரையாடல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது

இந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தொடர்பான குழு கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள பிரதி பணிப்பாளர் எஸ் .இன்பராஜன் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் உதயகுமார் , கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் கிருபாகரன் , சி.எச்.ஏ. மாகாண திட்ட இணைப்பாளர் எஸ் .பி .சில்வஸ்டர்; தனியார் வங்கிகளின் உத்தியோகத்தர்கள் , அரச திணைக்கள அதிகாரிகள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்ச்சியாக இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படும் மாவட்டமாக காணப்படும் நிலையில் அனர்த்தங்களின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

DSC_0618 DSC_0619 DSC_0620 DSC_0621 DSC_0622 DSC_0623 DSC_0625 DSC_0627 DSC_0629