சிறிய முத்துக்களுடன் ஐவர் கைது

432 0

420 சிறிய வகை முத்துக்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் ​கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலேவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனாதன, கலேவல பிரதேசத்தில் ​நேற்று (23) மாலை 3 மணியளவில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முத்துக்கள் புதையல் மூலம் சந்தேகநபர்கள் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40, 42, 27, 34 மற்றும் 35 வயதானவர்கள் எனவும், இவர்கள் கலேவல, பசறை, வெளிக்கந்த, மஹாஓயா மற்றும் திஸ்ஸமகாராம பகுதிகளைச் ​சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர.

சந்தேகநபர்கள் ஐவரும் இன்றைய தினம் (24) தம்புளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தம்புளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment